search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு"

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து நெல்லை, கன்னியாகுமரியில் முடக்கி வைக்கப்பட்டிருந்த இணையதளச் சேவை இன்று மீண்டும் தொடங்கியது. #Thoothukudipolicefiring #internetresumes
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானதை தொடர்ந்து தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் வதந்திகள் பரவாமல் இருக்க இணையதளச் சேவைகளை முடக்கிவைத்து உத்தரவிடப்பட்டிருந்தது.

    இந்நிலையில், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த இருநாட்களாக முடக்கி வைக்கப்பட்டிருந்த இணையதளச் சேவை இன்று மாலை முதல் மீண்டும் செயல்பட தொடங்கியது.

    எனினும், தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் இணையச்சேவைக்கான தடை இன்னும் நடைமுறையில் உள்ளது. #Thoothukudipolicefiring #internetresumes
    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து சிவகங்கை மாவட்டத்தில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட கடைகள் இன்று அடைக்கப்பட்டன.
    சிவகங்கை:

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து சிவகங்கை மாவட்டத்தில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட கடைகள் இன்று அடைக்கப்பட்டன.

    சிவகங்கை நகரில் பஸ் நிலையம், மார்க்கெட் மற்றும் முக்கிய இடங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    நகர் பகுதியில் அ.தி.மு.க. நகர பொருளாளர் முஸ்தபா தனக்கு சொந்தமான டீக்கடையை திறந்து வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த தி.மு.க. நிர்வாகிகள் ஆனந்தன் உள்பட சிலர் கடையை அடைக்குமாறு வலியுறுத்தினர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதையடுத்து அந்தப்பகுதியில் அ.தி.மு.க., தி.மு.க.வினர் திரண்டனர். இதனால் அங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சிவகங்கை நகரில் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    இதே போல் மாவட்டத்தின் பிற பகுதிகளான காளையார் கோவில், தேவகோட்டை, காரைக்குடி, கல்லல் ஆகிய பகுதிகளில் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    மானாமதுரையில் புதிய பஸ் நிலையம், வாரச்சந்தை, சுந்தரபுரம் கடை வீதி ஆகிய பகுதிகளில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டு இருந்தன.#tamilnews
    தூத்துக்குடியில் 13 உயிர்களை பறித்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவின் மீது சுப்ரீம் கோர்ட்டில் வரும் 28-ம் தேதி விசாரணை நடைபெறுகிறது. #Thoothukudipolicefiring
    புதுடெல்லி:

    தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியாக சென்றவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

    இச்சம்பவம், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பான வழக்கு காவல் துறையிடம் இருந்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு இன்று மாற்றப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரி வழக்கறிஞர் ஜி.மணி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.


    இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக தூத்துக்குடி கலெக்டர் மற்றும் போலீஸ் கண்காணிப்பாளர் ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் என்பதால் இந்த மனுவை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும் என மனுதாரர் கேட்டுக் கொண்டார்.

    இம்மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் மறுவிசாரணையை வரும் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். #Thoothukudipolicefiring
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு அறிக்கை அளித்துள்ளது. #ThoothukudiFiring #SterliteProtest #TNreport
    புதுடெல்லி:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தின்போது போலீசார் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம், தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

    அதன்படி தூத்துக்குடி கலவரம் தொடர்பாக விரிவான அறிக்கையை தமிழக அரசு உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இந்த அறிக்கையை அனுப்பியிருப்பதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.



    ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் கலவரமாக மாறியது ஏன்? போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான அவசியம் என்ன? இத்தனை பெரிய கலவரம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தமிழக உளவுத்துறை முன்கூட்டியே அறியாமல் இருந்தது ஏன்? என்பன போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடை அளிக்கும் வகையில் அந்த அறிக்கை விரிவானதாக இருக்கவேண்டும் என்று உள்துறை அமைச்சகம் கேட்டிருந்தது. இதற்கு தமிழக அரசின் சார்பில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. #ThoothukudiFiring #SterliteProtest #TNreport
    ஸ்டெர்லைட் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணாமல் துப்பாக்கி சூடு நடத்தியது தவறு என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். #GKVasan #ThoothukudiFiring #SterliteProtest
    தஞ்சாவூர்:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தஞ்சையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கூடிய கட்டாய சூழல் மத்திய-மாநில அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

    நியாயமாக போராடிய இந்த பிரச்சனைக்கு அணுகுமுறை சரியானதாக பின்பற்றபடவில்லை. ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்தியவர்களிடம் கலந்து பேசி தீர்வு காணாமல் துப்பாக்கி சூடு நடத்தியது ஜனநாயகத்திற்கு எதிரானது.

    100-வது நாள் போராட்டத்தை அதனுடைய அவசரம், அவசியம், தாக்கம், முக்கியத்துவம் ஆகியவை புரிந்து செயல்படாமல் தமிழக அரசும், காவல்துறையும் மிக சுலபமாக கையாளுவதாக நினைத்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். இது காவல்துறையின் பொறுப்பற்ற செயல்.

    முறையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறி விட்டனர். இதன் காரணமாகதான் உயிர்பலி ஏற்பட்டுள்ளது. காவல்துறையின் அவசர போக்கு, பொறுமை இழந்த செயல் இனிமேல் மக்கள் மத்தியில் எடுபடாது. உயிர் இழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 லட்சமும், அரசு வேலையும் வழங்க வேண்டும்.

    தங்களது கோட்பாட்டை மதிக்காமல் மீறி செயல்பட்ட காவல்துறையின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் உண்மையை மக்கள் தெரிந்து கொள்வதற்காக நீதி விசாரணை நடத்த வேண்டும்.


    அமைச்சர் ஜெயக்குமார் துப்பாக்கி சூடு தவறில்லை என்று கூறியது நியாயமற்ற, மனிதாபிமானமற்ற செயல். மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்க அரசு தவறி விட்டது. துப்பாக்கி சூடு அவசியமற்றது.

    கலெக்டர் அலுவலகத்திற்கு வருவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து பொதுமக்களை தடுத்து நிறுத்தி இருக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #TamilMaanilaCongress #GKVasan #ThoothukudiFiring  #SterliteProtest
    ×